‘பெகாசஸ்’ விவகாரம்: நாடு முழுவதும் நாளை மறுநாள் காங்கிரஸ் சார்பில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முடிவு..!

டெல்லி: ஒட்டுக்கேட்பு விவகாரம் தொடர்பாக நாடு முழுவதும் நாளை மறுநாள் காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடைபெறுகிறது. அனைத்து மாநிலங்களிலும் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. நாடு முழுவதும் ‘பெகாசஸ்’ தொலைப்பேசி உரையாடல் ஒட்டுகேட்பு விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

இதில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல், 2 ஒன்றிய அமைச்சர்கள், நீதிபதி, எதிர்க்கட்சி தலைவர்கள் மற்றும் ஒன்றிய அரசை எதிர்த்தவர்கள் என சுமார் 300 இந்தியர்களின் தொலைபேசி உரையாடல் ஒட்டு கேட்கப்பட்டதாக பட்டியல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இஸ்ரேல் நாட்டு தொழில்நுட்பமான பெகாசசை பயன்படுத்தி, மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள், பத்திரிகையாளர்களின் செல்போன் உளவுபார்க்கப்பட்டுள்ளதாக தி வயர் இணையதளம் செய்தி வெளியிட்டது. இந்நிலையில் இந்தப் பிரச்சனை நேற்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிரொலித்தது.

இந்த பட்டியலில் காங்கிஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி பயன்படுத்திய 2 செல்போன் எண்கள் 2018ம் நடு பகுதியில் இருந்து 2019ம் ஆண்டு நடு பகுதி வரை ஒட்டுக்கேட்கப்பட்டுள்ளது. தற்போது இந்த எண்களை ராகுல் பயன்படுத்தவில்லை. மேலும், ராகுலின் 5 நண்பர்கள் மற்றும் அவருக்கு அறிமுகமானவர்கள் குறிவைக்கப்பட்டு உளவு பார்க்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஒட்டுக்கேட்பு விவகாரம் தொடர்பாக நாடு முழுவதும் நாளை மறுநாள் காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடைபெறுகிறது. அனைத்து மாநிலங்களிலும் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.

Related Stories: