பிளஸ் 2 தேர்வு மதிப்பெண்களை மிக நேர்த்தியாக கணக்கிட்டது மகிழ்ச்சியளிக்கிறது: தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் அறிக்கை

சென்னை: பிளஸ் 2 தேர்வு மதிப்பெண்களை மிக நேர்த்தியாக கணக்கிட்டது மகிழ்ச்சியளிக்கிறது என தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு ஆசிரியர் சங்க மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில்; பெரும் எதிர்ர்ப்பினையும் அதேநேரத்தில் குழப்பமும் மேலோங்கியிருந்த நிலையில் இன்று பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் முற்றுப்புள்ளி வைத்திருக்கின்றது. பெருந்தொற்று நீ நுண்மியிலிருந்து மாணவர்களை பாதுகாக்கும் பொருட்டு பொதுத்தேர்வினை ரத்து செய்து தமிழக அரசு எடுத்த நடவடிக்கை வரவேற்புக்குரியது.

பல அமைப்புகள் கல்வியாளர்கள் தேர்வை வைத்தாகவேண்டும் என வலியுறுத்திவந்த நிலையில் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் மட்டுமே மாணவர்களின் நலன்கருதி +2 பொதுத்தேர்வை ரத்துசெய்யவேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தியதன்பேரில் மாண்புமிகு முதல்வர் அவர்களின் அறிவுப்பூர்வமானச் செயலினால் மாணவர்களின் நலன்கருதி  பொதுத்தேர்வு ரத்துசெய்யப்பட்டது. இதனால் உயர்கல்வி பாதிக்கும்  மதிப்பெண்கள் சரியாகக் கணக்கிடமுடியாது என்று வெற்று கூச்சலிட்டவர்கள் மத்தியில் மதிப்பெண்கள் கணக்கீடு செய்வதற்கு பள்ளிக்கல்வித்துறை செயலாளர் அவர்களின் தலைமையில் அமைத்து குழு இன்றைக்கு மிக நேர்த்தியான முறையில் ஆய்வுசெய்து மதிப்பெண்கள் கணக்கிட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

மாணவர்கள் பெற்றோர்கள் ஆசிரியர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப்பெற்றுள்ளது. தமிற்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் மாண்புமிகு. முதல்வர் அவர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், செயலாளர், ஆணையர் மற்றும் மதிப்பெண்கள் கணக்கீட்டுக்குழுவிற்கும் நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: