சிறுவனுக்கு தொடர் பாலியல் தொந்தரவு; இளம்பெண்ணுக்கு போலீஸ் எச்சரிக்கை: செங்குன்றம் அருகே பரபரப்பு

புழல்: பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளுக்கு சட்டம் இயற்றப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, பெண் குழந்தைகளிடம் பாலியல் தொல்லையில் ஈடுபடுபவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகின்றனர். எதிர்மாறாக சில பெண்களும் குழந்தைகளிடம் பாலியல் சீண்டல் மற்றும் தொல்லை கொடுப்பது அவ்வப்போது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அவ்வாறான ஒரு சம்பவம் திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த தீர்த்தங்கரையம்பட்டு கிராமத்தில் நடைபெற்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த தீர்த்தங்கரையம்பட்டு கிராமம்  இருசப்பன் தெருவைச் சேர்ந்த தம்பதியருக்கு  17 வயதில் ஒரு மகன் உள்ளார். இவன் அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஏசி மெக்கானிக்காக  வேலை செய்து வருகிறான். இந்நிலையில், இவனுடைய பக்கத்து வீட்டில் வசிப்பவர் ஷிவானி (25) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). திருமணமான இவர் சிறுவனை அடிக்கடி தனியாக இருட்டான பகுதிக்கு அழைத்துச் சென்று தவறாக நடந்துவந்துள்ளார். இதனால் பயந்துபோன சிறுவன், இதுகுறித்து தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனையடுத்து, செங்குன்றம் காவல் நிலையத்தில் சிறுவனின் தாய் புகார் அளித்தார்.

பெண் சம்பந்தப்பட்ட புகார் என்பதால் மாதவரம் மகளிர் காவல் நிலையத்துக்கு அந்த புகார் மாற்றப்பட்டது. அங்கு ஷிவானியை அழைத்து விசாரித்ததில், சிறுவனிடம் தகாத முறையில் நடந்தது உண்மை என  தெரியவந்தது. இதையடுத்து, அப்பகுதியில் ஷவானி குடியிருக்கக்கூடாது என்றும், சிறுவனுக்கு எங்கிருந்தும் தொந்தரவு கொடுக்கக்கூடாது எனவும் எழுதி வாங்கி போலீசார் எச்சரித்து அனுப்பி உள்ளனர்.

Related Stories: