காவிரி நதிநீர் பிரச்னையில் தமிழக அரசுக்கு கோமக துணை நிற்கும்: எம்வி.சேகர் அறிக்கை

சென்னை: கோகுல மக்கள் கட்சி நிறுவனர் தலைவர் எம்வி.சேகர் வெளியிட்டுள்ள அறிக்கை: காவிரி நதிநீர் பிரச்னை ஒட்டுமொத்த தமிழக மக்களின் பிரச்னையாகும். இது ஒரு அரசியல் சார்ந்த பிரச்னையல்ல. குறிப்பாக விவசாயிகளின் வாழ்வாதார பிரச்னை. எட்டு கோடி தமிழர்களின் உணர்வில் கலந்த வாழ்வியல் பிரச்னையாகும். ஒட்டுமொத்த தமிழக மக்கள் ஒற்றுமையாக இணைந்து மத்திய அரசிற்கு எடுத்து சொல்ல வேண்டிய நேரம் இது. தமிழக அரசு சட்டமன்றத்தில் தமிழக விவசாயிகள் நலன் மற்றும் தமிழக மக்கள் நலன் கருதி நிறைவேற்றிய தீர்மானங்களை மத்திய அரசுக்கு கொண்டு சென்று இத்தீர்மானம் வெற்றியடைய தமிழக முதல்வருக்கு கோகுல மக்கள் கட்சி என்றும் துணை நிற்கும்.

மேலும் தமிழக விவசாய மக்களின் உயிர்நாடிப் பிரச்னையான காவிரி பிரச்னையில் மத்திய அரசு தமிழக அரசின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என கோகுல மக்கள் கட்சி சார்பில் நான் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன். டெல்லி சென்றுவந்த தமிழக குழுவின் நோக்கம் வெற்றி பெற கோமக சார்பில் வாழ்த்துகிறேன். தமிழகத்தின் நீர் உரிமையை பறிக்கும் கர்நாடக அரசு மேகதாது அணை கட்ட  முயற்சிப்பதை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும். கர்நாடக அரசின் அடாவடி தனத்தை மத்திய அரசு வேடிக்கை பார்க்காமல் தடுத்து நிறுத்த வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: