முக்கிய செய்தி சென்னை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரண்டாவது முறையாக இன்று மாலை டெல்லி பயணம்: நாளை பகல் 12 மணிக்கு குடியரசுத் தலைவருடன் சந்திப்பு Jul 18, 2021 தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் முதல் அமைச்சர் எம்.கே. ஸ்டாலின் தில்லி ஜனாதிபதி சென்னை: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரண்டாவது முறையாக இன்று மாலை டெல்லி செல்ல உள்ளார். தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு இரண்டாவது முறையாக மு.க.ஸ்டாலின் டெல்லி செல்ல உள்ளார். நாளை பகல் 12 மணிக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தை சந்தித்து பேச இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தை மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேச உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு தீவிரமாக செயல்பட்டு வரும்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி பயணம் மேற்கொள்கிறார். கர்நாடக அரசு 9 ஆயிரம் கோடி ரூபாயில் காவிரி ஆற்றின் குறுக்கே புதிய அணை கட்ட முடிவு செய்துள்ளது. கர்நாடக அரசின் இந்த மேகதாது அணை திட்டத்திற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த விவகாரத்தில், இரு மாநில அரசுகளும் தங்களின் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கின்றன. தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சி தலைவர்கள் அடங்கிய குழு டெல்லி புறப்பட்டு சென்றது. இந்த குழு தமிழக அமைச்சர் துரைமுருகன் தலைமையில் மத்திய நீர்வளத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து முறையிட்டது. அவர்களைத் தொடர்ந்து கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா டெல்லி செல்கிறார். அவர் பிரதமரை நேரில் சந்தித்து மேகதாது திட்டத்திற்கு விரைவாக அனுமதி வழங்குமாறு எடியூரப்பா கோரிக்கை விடுத்ததாக தகவல் வெளியாகி இருந்தது.
அக்னி நட்சத்திரம் நாளை துவங்க உள்ள நிலையில் 17 இடங்களில் 100 டிகிரி வெயில் கொளுத்தியது: கரூர் 112, ஈரோடு 111, வேலூரில் 110 டிகிரி பதிவு; 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்; வானிலை ஆய்வு மையம் அறிக்கை
ஆட்சிக்கு வந்து 10 ஆண்டுகளில் பாரதிய ஜனதா கட்சி மலைக்க வைக்கும் அளவுக்கு ரூ.60,000 கோடிக்கு மேல் செலவு
ஆபாச வீடியோ பிரச்னை விஸ்வரூபம் எடுப்பதால் ஆந்திராவில் பிரசாரம் செய்ய பிரதமர் மோடி, அமித்ஷா மறுப்பு?: சந்திரபாபு, பவன்கல்யாண் `அப்செட்’
மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தின்கீழ் 12 மாவட்டங்களில் ₹306 கோடி வசூலிப்பு: சென்னை உயர் நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிர்வாகம் தகவல்
தமிழகத்தில் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் தயார்; தேர்வு முடிவுகளை வெளியிட தேர்தல் ஆணையத்திடம் பள்ளிக்கல்வித்துறை அனுமதி கேட்பு..!!
போதைப்பொருள் வழக்கில் கைதான ராகுலுக்கு சர்வதேச போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பா?.. முக்கிய ஆவணங்கள் சிக்கின..போலீஸ் தீவிர விசாரணை..!!
திருவண்ணாமலை – சென்னை இடையே நாளை முதல் ரூ.50 கட்டணத்தில் சிறப்பு ரயில் இயக்கப்படும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
தஞ்சை பெரிய கோயில் பராமரிப்பு பணி தொடர்பாக அவதூறு பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசு எச்சரிக்கை
ராகுல் காந்தி இந்தியாவின் பிரதமராக வேண்டும் என பாகிஸ்தான் விரும்புவதாக பிரதமர் மோடி உரை : வாக்கு ஜிஹாத் குறித்தும் சாடல்!
மக்களவை தேர்தல் பரப்புரையில் ‘டீப் ஃபேக்’ வீடியோக்கள்: தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு..!!
மனித உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வெடிமருந்துகளை அருகருகே வைத்து கிடங்கில் இறக்கியதே கல்குவாரி விபத்துக்கு காரணம் :எஃப்.ஐ.ஆரில் பரபரப்பு தகவல்
சென்னையில் வாட்ஸ் ஆப் குழு மூலம் போதைப்பொருள் விற்பனை செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் உறவினர் உட்பட 2 பேர் கைது..!!
தமிழகத்தில் தீவிர வெப்ப அலைக்கான ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை.. எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா? :பாலச்சந்திரன் சொல்வது என்ன ?
இந்தியாவையே உலுக்கிய பாலியல் புகார் : பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்: தேடப்படும் குற்றவாளியாக எஸ்ஐடி பிரகடனம்!!
ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கான இ-பாஸ் வழிகாட்டு நெறிமுறை இன்று மாலை அறிவிப்பு..!!
மதுபாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10-க்கு விற்றதன் மூலம் 12 மாவட்டங்களில் ரூ.306.32 கோடி வசூல்: ஐகோர்ட்டில் டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் பதில்
கல்குவாரி வெடிவிபத்து எதிரொலி!: மதுரை மாவட்டத்தில் உள்ள கல்குவாரிகள் அனைத்தையும் ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!!