தமிழகத்தில் புதிதாக அமையும் 11 புதிய மருத்துவக்கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறித்து ஆய்வு நடத்த ஒன்றிய குழு விரைவில் வருகை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னை: 11 புதிய மருத்துவக்கல்லூரிகளில், மாணவர் சேர்க்கை தொடர்பாக ஒன்றிய குழு ஆய்வு நடத்த விரைவில் தமிழகம் வர உள்ளது என்று மக்கள்  நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். தியாகிகள்  ஆர்யா பாஷ்யம் சங்கரலிங்கனார் செண்பகராமன் ஆகியோரின் தியாகத்தை நினைவு  கூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 17ம் நாள் தியாகிகள் தினமாக  கொண்டாடப்படுகிறது. அதன்படி சென்னை கிண்டியில் உள்ள தியாகிகள் மணி  மண்டபத்தில் தியாகிகள் ஆர்யா (எ) பாஷ்யம், சங்கரலிங்கனார், செண்பகராமன்  ஆகியோரின் உருவப்படத்திற்கு மருத்துவத்துறை அமைச்சர்  மா.சுப்பிரமணியன் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் அமைச்சர்  மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது: காந்தி மண்டப வளாகத்தில் தியாகிகள் மணி மண்படத்தை திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி திறந்து வைத்தார். திமுக ஆட்சிக்கு வரும் போது மொழி போராட்டத்தில் ஈடுபட்ட தியாகிகளுக்கு சிலைகள், மணிமண்டபம் அமைக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து நேற்று தியாகிகள் ஆர்யா (எ) பாஷ்யம், சங்கரலிங்கனார், செண்பகராமன் ஆகியோர் சிலைக்கு மலர் தூவி மரியாதை ெசய்யப்பட்டது. அதிமுக ஆட்சியின்போது, 150க்கும் மேற்பட்ட லாரிகள் மூலம் மண்ணை கொட்டி ஏரியை மூடுவதற்கு முயன்ற போது திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் போராட்டம் நடத்தினர்.

அப்போது, ஓபிஎஸ்தான் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தார். அவர் தான் மண்ணை கொட்டி அந்த ஏரியை மூடுவதற்கான முயற்சி செய்தார்.அதேபோல்  தமிழகத்தில் அதிகளவு தடுப்பூசி செலுத்துவது குறித்து பிரதமரே பாராட்டி  உள்ளதாக ஒன்றிய அமைச்சர் கூறினார். தமிழகத்தில், 11 புதிய மருத்துவக் கல்லூரிகள் மாணவர்கள்  சேர்க்கை மற்றும் கட்டுமான பணிகள் தொடர்பாக அனைத்து புகைப்பட தரவுகளையும் ஒன்றிய சுகாதாரத்துறை  அமைச்சரிடம் அளித்து உள்ளது. எனவே விரைவில் ஒன்றிய அரசு குழு தமிழகம்  வந்து கல்லூரிகளை ஆய்வு செய்ய உள்ளது. அதன்பின் தான் மாணவர்கள் சேர்க்கை  குறித்து தெரியவரும்.

எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி மாணவர்கள் சேர்க்கை சம்பந்தமாக 4 கருத்துகளை ஒன்றிய அரசு கூறினார்கள். அந்த நான்கும் தமிழக அரசுக்கு ஏற்புடையதல்ல. எனவே தமிழகத்தில் மற்ற மாவட்டங்களில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் 30 மாணவர்கள் வீதம் சேர்த்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் புதியதாக எய்ம்ஸ்  மருத்துவமனை அமைப்பது குறித்து ஒன்றிய அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளது.  அது குறித்து அமைச்சர் பரிசீலப்பதாக கூறியுள்ளார்.

Related Stories: