சென்னை மாநகர அரசு வக்கீலாக ஜி.தேவராஜன் நியமனம்

சென்னை: சென்னை மாநகர அரசு குற்றவியல் தலைமை வக்கீலாக ஜி.தேவராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை மாநகரம் முழுவதும் உள்ள குற்ற வழக்குகளை விசாரிக்க உயர் நீதிமன்ற வளாகத்தில் முதன்மை செஷன்ஸ் நீதிமன்றம் மற்றும் 7 கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றங்கள் உள்ளன. இந்த நீதிமன்றங்களுக்கு அரசு தரப்பில் ஆஜராக வக்கீல்கள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள்.  இந்நிலையில், மாநகர அரசு குற்றவியல் தலைமை வக்கீலாக ஜி.தேவராஜனை நியமனம் செய்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

இவர் கடந்த திமுக ஆட்சியின்போது போதைப்பொருள் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் சிறப்பு அரசு வக்கீலாக பணியாற்றியவர். குற்றவியல் வழக்குகளில் நல்ல நிபுணத்துவம் பெற்றவர். போதைப்பொருள் தடுப்பு வழக்குகளில் பல முக்கிய வழக்குகளில் ஆஜராகி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தந்துள்ளார். தற்போது, சென்னை மாநகர அரசு வக்கீலாக தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளதாக அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: