ஊடகங்களின் மீது பாஜக மிகப்பெரிய மதிப்பு வைத்துள்ளது: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டி

சென்னை: தமிழ்நாடு பாஜகவின் புதிய தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றார். அண்ணாமலையின் நியமன ஆணையை தேசிய செயலாளர் சி.டி.ரவி வழங்கினார். தமிழ்நாடு பாஜக தலைவராக பொறுப்பேற்ற அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர்; ஒரு ஆண்டாக கட்சிக்கு உழைத்த எனக்கு பெரிய பொறுப்பை தந்துள்ளனர். பாஜகவில் சேர ஐபிஎஸ் வேலையை விட்டுவிடுவது என்ற கடினமான முடிவை எடுத்தேன். தேசியப்பற்று காரணாமாக பாஜகவில் இணைந்தேன். ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு நீட் தேர்வு ஒரு வரப்பிரசாதம்.

நீட் தேர்வின் சாதகங்களை மக்களிடம் எடுத்துக் கூறுவோம். நீட் தேர்வால் தான் பணமில்லாத ஏழை மாணவர்களும் மருத்துவக் கல்வி பயில முடிகிறது. நீட் தேர்வால் மருத்துவ படிப்புகளுக்கு கோடிக்கணக்கில் ரூபாய் செலவிடுவது தடுக்கப்பட்டது. நீட் தேர்வு மூலம் கிராமப்புற மாணவர்கள் பயன் அடைந்துள்ளனர். மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்துளோம். அனைத்துக்கட்சி கூட்டத்தில் பாஜகவின் நிலைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊடகத்தின் மீது மிகுந்த மதிப்பு, நம்பிக்கை எனக்கு உண்டு.

ஐடி சட்டத்தில் உள்ள ஊடக நெறிமுறைகள் என்ற பிரிவைப் பற்றி தான் நான் பேசினேன். கொங்குநாடு தீர்மானம் தொடர்பாக கோவை வடக்கு பாஜகவுடன் விளக்கம் கேட்டுள்ளோம்  எனவும் கூறினார்.

Related Stories: