ஒரு மாவட்டத்துக்கு ஒரு சட்டக்கல்லூரி: அமைச்சர் ரகுபதி தகவல்

சென்னை: ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு அரசு சட்டக்கல்லூரி கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் ரகுபதி கூறினார். இதுகுறித்து சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நேற்று சென்னை தலைமை செயலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் 16 தனியார் சட்ட கல்லூரிகளுக்கு  கடந்த அதிமுக ஆட்சியில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தற்போது, திமுக ஆட்சியில், ஒவ்வொரு  மாவட்டத்துக்கும் ஒரு அரசு சட்டக்கல்லூரி கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி  வருகின்ற 5 ஆண்டுகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். நீட் தேர்வுக்கு மாணவர்கள் தயாராக இருக்க வேண்டும், அதேநேரம் தமிழக அரசும் நீட் தேர்வுக்கு விலக்கு பெற முயற்சிக்கும். நீண்டநாள் சிறையில் உள்ள கைதிகளை விடுவிப்பது குறித்து அமைச்சரவை கூடி கொள்கை முடிவு எடுத்து தான் முடிவு செய்ய முடியும். உச்ச நீதிமன்றத்தின் கிளை சென்னையில் வேண்டும் என கேட்டுக்கொண்டு இருக்கிறோம். அரசு சார்ந்த எல்லா வழக்குகளையும் கணினிமயமாக்கி அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட உள்ளது. நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: