பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளுக்கு தண்ணீர் செல்வது நிறுத்தம்

திருவள்ளூர்: பூண்டி நீர்த்தேகத்தில் இருந்து செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளுக்கு தண்ணீர் செல்வது தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்ட கிருஷ்ணா நதிநீர் கிருஷ்ணா கால்வாயின் முலம் பூண்டி சத்தியமூர்த்தி நீர்தேக்கத்துக்கு வந்து கொண்டு இருக்கிறது. சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக இருப்பது பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம். இந்த நீர்த்தக்கத்தின் மொத்த கொள்ளளவான 3,231 மில்லியன் கனஅடியில் தற்போது 785 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது.

தமிழக அரசின் வேண்டுகோளை ஏற்று  ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து வினாடிக்கு 2,500 கன அடிநீர் திறந்துவிடப்பட்டது. இதையடுத்து 152 கிமீ தூரம் பயணித்து தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயின்ட்டுக்கு வந்தடைந்து, அங்கிருந்து பூண்டி நீர்தேக்கத்திற்கு 602 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு தண்ணீர் அனுப்பப்பட்டு வந்தது. தற்போது போதுமான அளவுக்கு தண்ணீர் இருப்பு உள்ளதால் பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து சென்னை பெருமாநகராட்சி மக்களின் குடிநீர் தேவைக்காக செம்பரம்பாக்கம் மற்றும் புழல் ஏரிகளுக்கு தண்ணீர் அனுப்புவது நேற்று முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

Related Stories: