ஜாதி சான்றிதழ் வழங்க கோரி இருளர் இன மக்கள் ஆர்டிஓவிடம் மனு

திருவள்ளூர்: கண்ணம்மாபேட்டையில்  உள்ள 25 இருளர் குடும்பங்களுக்கு ஜாதி சான்றிதழ் வழங்க கோரி கோட்டாட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. திருவள்ளூர் மாவட்ட இருளர் முன்னேற்ற சங்க நிறுவனர் இரா.பிரபு, சங்க நிர்வாகி மணி ஆகியோர் திருவள்ளூர் ஆர்டிஓ பிரீத்தி பார்கவியிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது. திருவள்ளூர் தாலுகா, பூண்டி ஒன்றியம், கண்ணம்மாபேட்டையில் உள்ள 25 இருளர் குடும்பங்கள் வசிக்கின்றனர். இவர்கள் இதுவரை ஜாதி சான்றிதழ் கிடைக்காமல் பெரிதும் அவதியுடைந்துள்ளனர். இவர்களது மனு மீது உரிய நடவடிக்கை எடுத்து 25 இருளர் குடும்பங்களுக்கும் ஜாதி சான்றிதழ் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Related Stories: