ஜூலை 24 முதல் காஞ்சி மடாதிபதி விஜயேந்திரரின் சாதுர்மாஸ்ய விரதம் தொடக்கம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மேலாளர் ந.சுந்தரேசன் கூறியதாவது. வியாச மகரிஷி உட்பட தங்களது குருமார்களுக்கு நன்றி தெரிவிக்கவும்,தங்களது ஆன்மிக பலத்தை பெருக்கி கொள்ளவும் சந்தியாசிகளால் கடைப்பிடிக்கப்படும் விரதமே சாதுர்மாஸ்ய விரதமாகும். இந்த விரத காலங்களில் சந்நியாசிகள் ஏதேனும் ஒரு இடத்தில் தங்கி தியானம்,ஜெபம் ஆகியவற்றில் ஈடுபடுவார்கள். காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மரபுப்படி காஞ்சி சங்கராச்சியார் விஜயேந்திர ஆண்டு தோறும் சாதுர்மாஸ்ய விரதம் அனுஷ்டிப்பது வழக்கம்.இதையொட்டி, இந்தாண்டுக்கான விஜயேந்திரரர் சாதுர்மாஸ்ய விரதம் காஞ்சிபுரம் அருகே ஓரிக்கையில் அமைந்துள்ள மகா பெரியவரின் சதாப்தி மணிமண்டபத்தில் இம்மாதம் 24ம் தேதி தொடங்கி, செப்டம்பர் 20ம் தேதி பௌர்ணமியுடன் நிறைவு பெறுகிறது.

விரத காலத்தின் போது அடுத்த தமிழ் ஆண்டுக்கான பஞ்சாங்கம் வெளியிடுபவர்களின் கலந்துரையாடலும், இம்மாதம் 29, 30, 31 ஆகிய நாட்களி நடைபெறுகிறது. மேலும் இவ்விரத நாட்களின் போதே பாரத தேசம் முழுவதும் வசிக்கும்  அக்னி ஹோத்ரிகள் சுமார் 130 முதல் 140 பேர் வரை பங்கேற்கும் மாநாடும் நடைபெறவுள்ளது. இந்த விரதம் நடைபெறும் 60 நாட்களிலும் தினசரி மாலையில் சங்கரமடத்தின் ஆஸ்தான வித்வான்கள்,உபன்யாசங்கள், பக்தர்கள் குழு,குழுவாக இணைந்து சமர்ப்பிக்கும் பிக்ஷாவந்தனங்கள்,நாமசங்கீர்த்தனைகள்,பிரபல வித்வான்களின் இன்னிசை நிகழ்ச்சிகள் ஆகியவை நடைபெறும். பக்தர்கள் தற்போதுள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டு அவரவர்கள் இருக்கும் இடத்திலேயே தியானம், பிரார்த்தனை, பாராயணங்களை செய்து கொள்ளலாம் என்றார்.

Related Stories: