ஆக்ஸிஜன் உற்பத்தி என்ற பெயரால் ஸ்டெர்லைட்டை மேலும் 6 மாதம் திறக்க நீதிமன்றத்தில் மனு

சென்னை: ஆக்ஸிஜன் உற்பத்தி பெயரால் ஸ்டெர்லைட் ஆலையை கூடுதலாக 6 மாதம் திறக்க நீதிமன்றத்தை நாடுவதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தியுள்ளது. எஸ்.டி.பி.ஐ.கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்ட அறிக்கை: நல்லெண்ணம் என்ற பெயரில் ஆக்ஸிஜனை உற்பத்தி செய்து, மறைமுகமாக ஸ்டெர்லைட் ஆலை பராமரிப்பு பணியை செய்து ஆலையை மீண்டும் இயக்கத் துடிக்கும் வேதாந்தாவின் மறைமுக சதித்திட்டத்திற்கு ஒருபோதும் ஆளும் அரசும், அரசியல் கட்சிகளும் துணை போய்விடக் கூடாது. ஸ்டெர்லைட் நிர்வாகம், தற்போது தமிழக அரசு மற்றும் உச்ச நீதிமன்றம் அளித்த கால அவகாசம் முடிவடைய உள்ள நிலையில், கூடுதலாக 6 மாத கால நீட்டிப்பு செய்ய உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளது. ஆக்ஸிஜன் உற்பத்தி பெயரால் ஆலையை கூடுதலாக 6 மாதம் திறக்க உச்ச நீதிமன்றத்திடம் அனுமதி கோரும்  ஸ்டெர்லைட் ஆலையின் முயற்சியை தமிழக அரசு எதிர்க்க வேண்டும். சட்டப்படி தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு அதில்் கூறப்பட்டுள்ளது.

Related Stories: