செவ்வாய், வெள்ளி கோள்கள் இணையும் அரிய வானியல் நிகழ்வு

செவ்வாய் மற்றும் வெள்ளி கோள்கள் ஒன்றையொன்று நெருங்கி இணைவது போன்ற அரிய வானியல் நிகழ்வு இன்று மற்றும் நாளை ஆகிய 2 நாட்கள் தென்பட உள்ளது. இன்றுமாலை சூரியன் மறைந்த பிறகு மேற்கு வானில் இந்த அற்புத காட்சி தெரியும். செவ்வாய், வெள்ளி ஆகிய 2 கோள்களுக்கும் சுமார் 4 டிகிரி தொலைவில் பிறைசந்திரன் தென்படும். அன்று மாலை மேற்கு வானில் தென்படும். நாளை இந்த 2 கோள்களுக்கும் இடையே வானில் 0.5 டிகிரி இடைவெளிதான் இருக்கும்.கோள்கள் ஒன்றையொன்று நெருங்கும் காட்சியை வெறும் கண்களால் பார்க்க முடியும். இதில் எந்தவித ஆபத்தும் இல்லை.

Related Stories: