வரத்து அதிகரிப்பால் கொய்யா விலை வீழ்ச்சி -விவசாயிகள் கவலை

ஒட்டன்சத்திரம் : திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தாசரிப்பட்டி, வேலூர் அன்னப்பட்டி, சிந்தலவாடம்பட்டி, ராமபட்டினம் புதூர், விருப்பாச்சி சத்திரப்பட்டி, ஆயக்குடி ஆகிய பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் கொய்யா நடவு செய்துள்ளனர். கொய்யா வருடம் முழுவதும் விளைச்சல் தரும் பயிராகும். ஊரடங்கு காரணமாக கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக பழங்கள் வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டதால் இப்பகுதியின் அதிக அளவில் விற்பனையாகாமல் தேக்கம் அடைந்துள்ளது. இதனால் கொய்யாப்பழத்திற்கு உரியவிலை இல்லாதால் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.

 கடந்த வருடம் ஊரடங்குக்கு முன்பு 23 கிலோ எடையுள்ள ஒரு பெட்டி கொய்யாப்பழம் ரூ.900 முதல் ரூ.1000 வரை மொத்த வியாபாரிகள் கொள்முதல் செய்யப்பட்டது.

தற்போது ஒரு பெட்டி கொய்யாப்பழம் ரூ.200 முதல் ரூ.250 வரை மொத்த வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்படுகிறது. இதன் காரணமாக கொய்யாப்பழ விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர். இதுகுறித்து  கொய்யாப்பழ வியாபாரி செல்வம் கூறியதாவது: கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக ஊரடங்கால் விளைவித்த கொய்யாப்பழங்கள் அதிகளவு ஏற்றுமதி செய்யப்படாததால் விற்பனையாகாமல் தேக்கமடைந்துள்ளது. மேலும் கொய்யாப்பழ நுகர்வு பொதுமக்களிடம் குறைவாக இருப்பதால், விலை வீழ்ச்சி அடைந்துள்ளது என்றனர்.

Related Stories: