மேகதாது விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் நடவடிக்கைகளுக்கு பாஜக முழு ஒத்துழைப்பு வழங்கும்: வி.பி.துரைசாமி பேச்சு

சென்னை: மேகதாது விவகாரத்தில் தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கு தமிழக பாஜக முழு ஒத்துழைப்பு வழங்கும் என கூறினார். காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதை எதிர்த்து தமிழக அரசு சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், மேகதாது பிரச்சினை குறித்து கலந்து ஆலோசிக்க தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளின் ஒருமித்த எண்ணங்களையும் பிரதிபலிக்கும் வகையில் அனைத்துகட்சி கூட்டம் இன்று நடைபெறும். இதில் தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற கட்சி பிரதிநிதிகளும் கலந்து கொள்வார்கள் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி இன்று காலை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துகட்சி கூட்டம் தொடங்கியது. அனைத்துக்கட்சி கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்; இதற்கு முன்பாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் மேகதாது விவகாரம் குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 2018 டிசம்பர் மாதம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை சுட்டிக்காட்டி பேசினார்.

வி.பி.துரைசாமி பேச்சு

கூட்டத்தில் பாஜக சார்பில் பேசிய வி.பி.துரைசாமி; மேகதாது விவகாரத்தில் தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கு தமிழக பாஜக முழு ஒத்துழைப்பு வழங்கும். மேகதாது விவகாரத்தில் தமிழக அரசு எடுக்கும்முடிவுக்கு தமிழக பாஜக ஆதரவளிக்கும். தமிழக அரசு சட்டப் போராட்டம் நடத்தினாலும் ஆதரவு தருவோம் என கூறினார்.

திருமாவளவன் பேச்சு

மேகதாது அணை பிரச்சனை குறித்து அனைத்துக்கட்சி தலைவர்களும் பிரதமரை சந்திக்க வேண்டும். பிரதமரை சந்தித்து தமிழ்நாட்டின் நியாயத்தை வலியுறுத்த வேண்டும். சட்டரீதியாகவும், அரசியல் ரீதியாகவும், அணை கட்டுவதை தடுக்க தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.

Related Stories: