மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே சிறுமிகளுக்கு செல்போனில் ஆபாச படங்களை காண்பித்து பாலியல் தொந்தரவு செய்ததாக பாஜக நிர்வாகி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். குத்தாலம் அருகே கோழிகுத்தி கிராமத்தை சேர்ந்த மகாலிங்கம் என்பவர் மயிலாடுதுறை தெற்கு ஒன்றிய பாஜக செயலாளர் பொறுப்பில் இருக்கிறார். 60 வயதுடைய இவர், அந்த கிராமத்தை சேர்ந்த 4 சிறுமிகளிடம் தனது செல்போனில் உள்ள ஆபாச படங்களை காண்பித்து தகாத முறையில் நடந்து கொண்டதாகவும், பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.