உலக மக்கள் தொகை நாள் விழிப்புணர்வு பிரசார ஊர்தி: அமைச்சர் மா.சுப்பிரமணியன் கொடியசைத்து துவக்கி வைத்தார்

சென்னை: தேனாம்பேட்டையில் உள்ள குடும்ப நல இயக்ககத்தில் உலக மக்கள் தொகை நாளை முன்னிட்டு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விழிப்புணர்வு பிரசார ஊர்தியை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். அப்போது அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் சோழிங்கநல்லூர் எம்எல்ஏ எஸ்.அரவிந்த் ரமேஷ், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை இயக்குநர் கணேஷ், குடும்ப நல இயக்கக இயக்குநர் ஹரிசுந்தரி, குடும்ப நல இணை இயக்குநர் டாக்டர் அமுதா மற்றும் அரசு உயரதிகாரிகள் கலந்துகொண்டனர்.

பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில்: குடும்ப நலத்திட்டத்தை செயல்படுத்துவதில் நாட்டிலேயே தமிழ்நாடு மற்ற மாநிலங்களுக்கு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. இந்தியாவின் தற்போதைய மக்கள் தொகை 139.8 கோடி, தமிழ்நாட்டின் தற்போதைய மக்கள் தொகை 8.4 கோடி 2018ன் படி 1.6 சதவீதம், தேசிய அளவில் 2.2 சதவீதம் ஆகும். தமிழகம் இந்த தேசிய அளவிலான இலக்கை முன்னரே அடைந்துள்ளது. பேறுகால மரண விகிதம் 2016-18ன் படி ஒரு லட்சம் குழந்தைகள் உயிருடன் பிறந்தால் 60 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். அதைப்போல் 2018ன்படி ஆயிரம் குழந்தைகள் உயிருடன் பிறந்தால் அதில் 15 குழந்தைகள் சிசு கொலை செய்யப்படுகின்றனர், என்றார்.

Related Stories: