10.5 சதவீத உள் இடஒதுக்கீடுக்கு 115 சாதிய சமூக அமைப்பின் கூட்டமைப்பு கடும் எதிர்ப்பு

மதுரை: மதுரையில் எம்பிசி, டிஎன்டி சமூகங்களின் 115 சாதிய சமூகநீதி கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதில், கடந்த அதிமுக ஆட்சியில் வன்னியர் சமூகத்திற்கு ஒதுக்கப்பட்ட 10.5 சதவீத உள் இடஒதுக்கீடுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இந்த இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தக்கூடாது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது குறித்து சமூக செயல்பாட்டாளரும், வழக்கறிஞருமான ரஜினி நிருபர்களிடம் கூறுகையில், ‘‘கடந்த அதிமுக ஆட்சி கொண்டு வந்த வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு  சட்டத்தை உடனடியாக ரத்து செய்யவேண்டும். இதனால், இந்த பிரிவில் உள்ள 115 சமூகத்தினர் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான கல்வி, வேலைவாய்ப்பில் உள்ள உரிமைகள், அடிப்படை உரிமைகள் பறிக்கப்படுகின்றன.  இதனை எதிர்த்து துவங்கப்பட்டதுதான் சமூகநீதி கூட்டமைப்பு. சாதிவாரியாக கணக்கெடுப்பு நடத்துவதற்கு அமைக்கப்பட்ட ஆணையம் இதுவரை எந்த அறிக்கையும் அரசிடம் சமர்ப்பிக்கவில்லை. இந்நிலையில் 10.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டை அனுமதிக்க முடியாது’’ என்றார்.

Related Stories: