பாணாவரம் அருகே சுகாதாரமற்று திறந்து கிடக்கும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி-சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

பாணாவரம் : பாணாவரம் அருகே உள்ளது மேலேரி கிராமம். இங்கு 1,500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். அவ்வாறு வசிக்கும் பொதுமக்களுக்கு அங்குள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து தினமும் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.இந்நிலையில், இங்குள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, முறையாக பராமரிக்கப்படாமலும், மூடப்படாமலும் திறந்த நிலையில் உள்ளது. இதனால் காக்கை, குருவி போன்ற பறவைகளின் கழிவு மற்றும் காற்றில் இருந்து வரும் பல்வேறு கழிவுகள் குடிநீரில் கலப்பதால், சுகாதார சீர்கேடுகள் ஏற்பட்டுள்ளது.

இதனால் குடிநீரை பயன்படுத்தும் பொதுமக்கள் உடல்நிலை பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், கொரோனா பெருந்தொற்று காலத்தில், மக்கள் பல்வேறு இடர்பாடுகளை அனுபவித்து வரும் நிலையில், இப்பகுதியில் தினமும் விநியோகிக்கப்படும் குடிநீர் பாதுகாக்கப்பட்ட, தூய்மையானதாக இருக்க வேண்டும் என்பதே இப்பகுதி பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை மூடி, பாதுகாப்பான குடிநீர் வழங்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: