நடிகையை ஏமாற்றிய வழக்கு முன்னாள் அமைச்சருக்கு நிபந்தனை ஜாமீன்: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: நடிகையை திருமணம் செய்துகொள்வதாக கூறி ஏமாற்றிய வழக்கில் முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றி விட்டதாகவும், கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்தது என நடிகை சாந்தினி அளித்த புகாரில் முன்னாள் அமைச்சர் மணிகண்டனை, அடையாறு மகளிர் போலீசார் ஜூன் 20ம் தேதி கைது செய்தனர். சிறையில்  அடைக்கப்பட்டுள்ள அவர், ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு, நீதிபதி நிர்மல் குமார் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, மணிகண்டன் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் கே.எஸ்.தினகரன் பல்வேறு வாதங்களை முன்வைத்து வாதிட்டார். அதற்கு போலீஸ் தரப்பில் ஜாமீன் வழங்க கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அனைத்து  தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மனுதாரர் மணிகண்டனுக்கு நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். அதன்படி, காவல்துறை முன்பு  தினமும் ஆஜராகி கையெழுத்திடவும், விசாரணைக்கு  தேவைப்படும்போதெல்லாம் ஆஜராகவும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. மணிகண்டனின் பாஸ்போர்ட்டை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்கவும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

Related Stories: