தமிழக சிறுபான்மையினர் நல ஆணைய தலைவராக பீட்டர் அல்போன்ஸ் பதவியேற்பு

சென்னை: தமிழக சிறுபான்மையினர் நல ஆணையம், சிறுபான்மையினரின் கல்வி, சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டுக்காக செயல்பட்டு வருகிறது. இதன் தலைவராக எஸ்.பீட்டர் அல்போன்ஸை நியமித்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். திமுக அரசில் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு சிறுபான்மையினர் நல ஆணைய பதவி கொடுக்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணா சாலையில் உள்ள தேவநேய பாவணர் நூலக வளாகத்தில் உள்ள அலுவலகத்தில் நேற்று பீட்டர் அல்போன்ஸ் பொறுப்பேற்றார். ஆணையத்தின் துணைத் தலைவராக டாக்டர் மஸ்தான் மற்றும் உறுப்பினர்கள்  பதவியேற்றனர். அவர்களுக்கு சிறுபான்மை நலத்துறை அமைச்சர் மஸ்தான் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார்.

மேலும், மமக தலைவர் ஜவாஹிருல்லா எம்எல்ஏ, நவாஸ் கனி எம்பி, முன்னாள் தலைவர் வின்சென்ட் சின்னதுரை, பழனிநாடார் எம்எல்ஏ, முன்னாள் எம்பி ராணி, தென்சென்னை மத்திய மாவட்ட காங்கிரஸ் தலைவர் முத்தழகன், சிவராஜ சேகரன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர். நிகழ்ச்சியில், மாநில துணை தலைவர் கோபண்ணா, செயற்குழு உறுப்பினர் எஸ்.டி.என்.செழியன், பொது செயலாளர் இல.பாஸ்கரன், செயலாளர் ஆலங்குளம் செல்வராஜ், நெல்லை குமரேஷ், ஜார்ஜ், வில்லிவாக்கம் டி.சுரேஷ், வழக்கறிஞர் ஆரோக்கியதாஸ், புழுதிவாக்கம் பகத்சிங், ஆலந்தூர் குமார், திருவான்மியூர் மனோகரன், மலர்கொடி, மயிலை தரணி உட்பட பலர் கலந்து கொண்டனர். பதவியேற்புக்கு பின்பு பீட்டர் அல்போன்ஸ் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘சிறுபான்மையினர் மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் பேரன்பு கொண்டுள்ளார். சிறுபான்மையினர் உரிமை மற்றும் வாழ்வாதாரத்தை பாதுகாக்க எல்லா முயற்சிகளை எடுக்க முதல்வர் எங்களுக்கு உத்தரவிட்டுள்ளார்’ என்றார்.

Related Stories: