ஒலிம்பிக் போட்டிக்கு சென்னை ஆயுதப்படை காவலர் நாகநாதன் தேர்வு: போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் வாழ்த்து

சென்னை:சென்னை ஆயுதப்படை காவலர் நாகநாதன் ஒலிப்பிக் போட்டிக்கு தேர்வாகி உள்ளார். போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார். சென்னை மாநகர ஆயுதப்படையில் இரண்டாம் நிலை காவலராக நாகநாதன் பணியாற்றி வருகிறார்.   இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் நடந்த ஒலிம்பிக் தகுதி சுற்று 400 மீட்டர் ஓட்டப்பந்தையத்தில் கலந்து கொள்ள காவலர் நாகநாதன் தேர்வானர். அவரை அப்போது மாநகர கமிஷனராக இருந்து மகேஷ்குமார் அகர்வால் நேரில் அழைத்து பயிற்சிக்கு தேவையான உபகரணங்களை வழங்கி பாராட்டினர்.

இதற்கிடேயே பஞ்சாப் மாநிலத்தில் நடந்த 400 மீட்டர் ஓட்டப்பந்தையம் தகுதி தேர்வில் அதிக புள்ளிகள் பெற்று ஆயுதப்படை காவலர் நாகநாதன் முதலிடம் பிடித்து ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வாகியுள்ளார். இதையடுத்து ஜப்பான் தலைநகர் டோக்யோவில் நடைபெறும் 400 மீட்டர் ஓட்டப்பந்தையத்தில் இந்தியா சார்பில் மாநகர ஆயுதப்படை காவலர் நாகநாதன் கலந்து கொள்கிறார். இதையடுத்து பஞ்சாப் மாநிலத்தில் பயிற்சியில் உள்ள ஆயுதப்படை காவலர் நாகநாதனுக்கு மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவாலை தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தார். தமிழகத்தில் இருந்து ஒலிப்பிக் போட்டிக்கு தேர்வாகி உள்ள 5 பேரில் சென்னை மாநகர ஆயுதப்படை காவலர் நாகநாதன் ஒருவர் என்பது குறிப்படித்தக்கது.

Related Stories: