சிறுவாபுரி முருகன் கோயிலில் பக்தர்கள் தரிசனத்துக்கு இன்று அனுமதி இல்லை

சென்னை: தமிழகம் முழுவதும் நேற்று முதல் ஒரே மாதிரியான தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் அனைத்து பகுதிகளில் வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டுள்ளது. அதிகாலை முதலே பக்தர்கள் நீண்டவரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். திருத்தணி முருகன் கோயில், திருவாலங்காடு சிவன் கோயில், பெரியபாளையம் பவானி அம்மன் கோயில், திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோயில் உள்பட புகழ்பெற்ற கோயில்கள் திறக்கப்பட்டு, பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் மேற்கண்ட கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. சில கோயில்களில் பக்தர்கள் சிறப்பு பூஜைகள் செய்ய அனுமதிக்கப்படவில்லை.

மாவட்டத்தில் புகழ்பெற்ற சிறுவாபுரி முருகன் கோயிலும் திறக்கப்பட்டுள்ளது. இங்கு வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் சென்ைன உள்பட பல பகுதியில் இருந்து பல்லாயிரக்காண பக்தர்கள் வருகை தருவார்கள். இதன்படி, இன்று செவ்வாய்க்கிழமை என்பதாலும் 60 நாட்களுக்கு பிறகு கோயில் நடை திறக்கப்பட்டுள்ளதால் வழக்கத்தைவிட பக்தர்கள் அதிகமாக கூடுவார்கள் என்று எதிர்பார்ப்படுகிறது. இதனால், சிறுவாரிபுரி முருகன் கோயிலில் இன்று பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. வெளியூர்களில் இருந்துவரும் பக்தர்களை கண்காணிக்க போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்கவும் மக்களின் நலன் கருதியும் கோயிலில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்று நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: