இணையத்தில் ஆபாசமாக பேசி வரும் டிக் டாக் புகழ் ரவுடி பேபி சூர்யா உள்ளிட்டோர் மீது நடவடிக்கை தேவை: டிஜிபியிடம் எல்லை பாதுகாப்பு படை வீரர் பரபரப்பு புகார்

சென்னை: சீனா செயலி டிக் டாக் மூலம் தமிழகத்தில் பலர் பிரபலமானார்கள். அந்த வகையில் ரவுடி பேபி சூர்யா, ஜி.பி.முத்து, திருச்சி சாதனா, சந்தான லட்சுமி, காத்து கருப்பு, சேலம் மணி உள்ளிட்டோர் டிக் டாக் செயலியை பயன்படுத்திய லட்சக்கணக்கான மக்களிடையே அறிமுகமானார்கள். சிலர் திரைப்படங்களிலும் நடித்து வருகின்றனர். மத்திய அரசு நாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சீனா செயலி டிக் டாக்கை அதிரடியாக தடை செய்தது. இதனால் டிக்டாக் மூலம் புகழ்பெற்வர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். மேலும், டிக் டாக் செயலி மீதான தடையை நீக்க மத்திய அரசுக்கு கோரிக்கையும் விடுத்தனர். ஆனால் மத்திய அரசு பாதுகாப்பு விஷயம் என்பதால் டிக் டாக் செயலிக்கு அனுமதி வழங்கவில்லை.

இதனால் டிக் டாக் மூலம் பிரபலமான அனைவரும் தங்களுக்கு என்று தனியாக யூடியூப் சேனல் தொடங்கி அதன் மூலம் வீடியோக்களை பதிவு செய்து வருகின்றனர். அந்த வீடியோக்கள் தற்போது ஒருவர் மீது ஒருவர் ஆபாசமாக பேசியும், குழந்தைகளை வைத்துக்கொண்டு பாலியல் உணர்வுகள் தூண்டும் வகையில் பேசியும் வருகின்றனர். சிலர் டிக்டாக் மூலம் கிடைத்த புகழை பயன்படுத்தி சிங்கப்பூருக்கு பாலியல் தொழில் செய்ய எவ்வளவு மாதம் ஊதியமாக வேண்டும் என்று கேட்டு வருகின்றனர். இதுபோன்ற ஆபாசமாகவும், மாணவர்கள் மற்றும் இளைஞர்களை தவறான பாதைக்கு அழைத்து செல்லும் வகையில் யூடியூப் மற்றும் சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் பதிவு செய்து வரும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி எல்லை பாதுகாப்பு படை வீரர் காளிராஜ், தமிழக காங்கிரஸ் கட்சி தென் சென்னை மாவட்ட செயலாளர் புனிதவள்ளி, சமூக ஆர்வலர் சுமித்ரா ஆகியோர் நேற்று டிஜிபி அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்று அளித்தனர்.

அந்த புகாரில் அவர்கள் கூறியிருப்பதாவது: ”சமூக வலைத்தளங்களில் ரவுடி பேபி சூர்யா, திருச்சி சாதனா, சந்தான லட்சுமி, காத்து கருப்பு, சேலம் மணி, ஜி.பி.முத்து, இலக்கியா உள்ளிட்டோர் ஆபாசமாக பேசியும், நடித்தும் வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர். இதனால் சமூக வலைத்தளங்களை பயன்படுத்தும் இளைஞர்களை தவறான பாதைக்கு அழைத்து செல்கின்றனர். அவர்கள் பேசும் ஆபாச பேச்சுக்கள் முகம் சுழிக்க வைக்கிறது. பள்ளி மாணவ, மாணவிகள், இளைஞர்கள் போன்றோர் இவர்களின் ஆபாச பேச்சுக்களால் மிகவும் பாதிக்கப்பட உள்ளதால் இவர்கள் மீது  சட்டப்படி நடவடிக்கை எடுத்து அவர்கள் பயன்படுத்தும் யூடியூப் சேனல்களை தடை செய்ய வேண்டும்.

Related Stories: