தமிழகத்தில் 26 துணை கலெக்டர்கள் பணியிட மாற்றம்: அரசு உத்தரவு

சென்னை: தமிழகத்தில் 26 துணை கலெக்டர்களை பணியிட மாற்றம் செய்து வருவாய்த்துறை முதன்மை செயலாளர் குமார் ஜெயந்த் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (தேர்தல்) சங்கர காமேஸ்வரன் சிவகங்கை மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளராகவும் (நிலம்), ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் கிருஷ்ணவேணி செங்கல்பட்டு தகவல் தொழில்நுட்ப சாலை மேம்பாட்டு திட்டம் (நில எடுப்பு) தனித்துணை கலெக்டராகவும், அரியலூர் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் சுகுமார் திருப்பூர் (கலால்) உதவி ஆணையராகவும், ேதனி மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் குப்புசாமி விழுப்புரம் தாட்கோ மாவட்ட மேலாளராகவும், நாமக்கல் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சரவணன் பெரம்பலூர் சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியராகவும், ஈரோடு மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் கருப்புசாமி நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவன (நில எடுப்பு) மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளராகவும், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் மாரி புதுக்கோட்டை கலால் உதவி ஆணையராகவும்,

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் கதிரேசன் விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை (நில எடுப்பு) தனித்துணை ஆட்சியராகவும், திருச்சி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் குமார் அரியலூர் சமூக பாதுகாப்பு திட்டம் தனித்துணை ஆட்சியர், தூத்துக்கு மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் அன்னம்மாள் ராமநாதபுரம் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலராகவும், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பிரபாகரன் அரியலூர் மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்), கரூர் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்), திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் செந்தில் நாதன் எழும்பூர் சிப்காப் (நிலஎடுப்பு) தனித்துணை ஆட்சியராகவும்,

விருதுநகர் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் கந்தசாமி ராமநாதபுரம் மாவட்டம் சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியராகவும், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சாந்தி சிவகங்கை ஈஐடி.பாரி (இந்தியா) நிறுவன வடிப்பக அலுவலராகவும், திருப்பூர் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் முரளி தேனி மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்), ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் நஜிமுன்னிசா மதுரை வடக்கு தமிழ்நாடு மாநில வாணிப கழகம்  (சில்லரை விற்பனை) மாவட்ட மேலாளராகவும், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் லோகநாதன் நீலகிரி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலராகவும், தென்காசி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் முருகேசன் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்), கடலூர் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ஏகாம்பரம் விழுப்புரம் சிப்காட் (நில எடுப்பு) தனித்துணை ஆட்சியராகவும்,

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் கோவிந்தன் மயிலாடுதுறை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர், தர்மபுரி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் நரேந்திரன் மயிலாடுதுறை கலால் உதவி ஆணையர், திருவண்ணாமலை மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் அகிலா தேவி அரக்கோணம் சிப்காட் பனப்பாக்கம் தொழிற்பூங்கா திட்டம் (நில எடுப்பு) தனித்துணை ஆட்சியராகவும், சிவகங்கை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ராம்குமார் தஞ்சாவூர் வருவாய் நீதிமன்றம் தனித்துணை ஆட்சியராகவும், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சக்தவேல் திருச்சி தமிழ்நாடு மாநில வாணிப கழகம் மாவட்ட மேலாளராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories: