சித்தாமூர் ஒன்றிய ஊராட்சிகளில் 1100 பேருக்கு கொரோனா நிவாரணம்: க.சுந்தர் எம்எல்ஏ வழங்கினார்

செய்யூர்: சித்தாமூர் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளில், கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்த கிராம மக்கள் 1,600 பேருக்கு அரிசி உள்ளிட்ட மளிகை பொருட்களை காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ வழங்கினார். செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் ஒன்றியம் பொலம்பாக்கம் கிராமத்தில், கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்த ஏழை எளியவர்கள் 600 பேருக்கு அரிசி, மளிகை பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. சித்தாமூர் மேற்கு ஒன்றிய செயலாளர் ஏழுமலை தலைமை தாங்கினார். ஒன்றிய நெசவாளர் அணி அமைப்பாளர் முருகானந்தம், ஞானகுரு ஆகியோர் முன்னிலை வகித்தனர். காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ கலந்துகொண்டு 600 பேருக்கு அரிசி, காய்கறி உள்ளிட்ட பொருட்களை வழங்கினார்.

எம்பி செல்வம், முன்னாள் எம்எல்ஏ ஆர்.டி.அரசு, சித்தாமூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் சிற்றரசு,  நிர்வாகிகள்  ஜனனி, தனசேகரன், வெங்கடகிருஷ்ணன், நிர்மல்குமார், ஆறுமுகம், பால்ராஜ், குணா, லோகு உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் கீழ்மருவத்தூர் ஊராட்சியில் தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட ஏழை, எளியோர் 500 பேருக்கு அரிசி, மளிகை பொருட்கள் வழங்கப்பட்டன. பருக்கள் ஊராட்சியில் கொரோனா நிவாரணமாக 500 பேருக்கு அரிசி, காய்கறிகள், சத்து மாத்திரைகள் மற்றும் கிருமி நாசினிகளை க.சுந்தர் எம்எல்ஏ கலந்துகொண்டு வழங்கினார். திமுக நிர்வாகிகள் வேதாச்சலம், முரளி கிருஷ்ணன், சாய் முருகன், மாரிமுத்து, ராமலிங்கம் தமிழரசன், விஜயகுமார், செந்தில், சக்திவேல், பாஸ்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: