கபாலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் இயங்கி வரும் மயிலாப்பூர் கிளப்பை காலி செய்யக்கோரி கோயில் நிர்வாகம் நோட்டீஸ்

சென்னை: சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் இயங்கி வரும் மயிலாப்பூர் கிளப்பை காலி செய்யக்கோரி கோயில் நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. சென்னை லஸ் சர்ச் சாலையில் கபாலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் மயிலாப்பூர் கிளப் இயங்கி வருகிறது.

120 ஆண்டுகள் பழமையான இந்த கிளப்புக்காக கோவில் நிர்வாகத்திற்கு மாதம் 4 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வாடகை செலுத்தப்படுவதாக கூறப்படுகிறது. கோவில் நிலத்துக்கு சொந்தமான இந்த கிளப்பில் இயங்கி வரும் மதுபான பாரை மூடுமாறு கடந்த 9ஆம் தேதி இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்திருந்தார்.

இதனை ஏற்று மயிலாப்பூர் கிளப் தலைவர் பிரமிப் நடராஜன் மதுபான பார் மூடப்பட்டிருப்பதாக கிளப் உறுப்பினர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். இந்நிலையில் வாடகை நிலுவை இருப்பதால் கிளப்பை காலி செய்ய கோரி கோவில் நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதுகுறித்து கிளப் தலைவர் பிரமிப் நடராஜனிடம் விளக்கம் கேட்டபோது அறநிலையத்துறை உத்தரவை ஏற்று மதுபான பார் உடனடியாக மூடப்பட்டது என கூறினார்.

Related Stories: