சென்னை மாநகராட்சி பகுதியில் கோவிஷீல்டு மட்டுமே கையிருப்பு

சென்னை: தமிழகம் முழுவதும் கடந்த 3 நாட்களாக  தடுப்பூசி தட்டுப்பாடு நிலவி வருகிறது. பொதுமக்கள் வரிசையில் நீண்ட நேரம் காத்திருந்த பின்னர் தடுப்பூசி இருப்பு இல்லை என்று தெரிவிக்கப்பட்டதால், பல இடங்களில் வாக்குவாதம் ஏற்பட்டது. தடுப்பூசி போட வந்த மக்கள் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இந்நிலையில் சென்னை மாநகராட்சி சார்பாக ஆன்லைன் வழியாக முன்பதிவு செய்து தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. 45 தடுப்பூசி மையங்கள் மற்றும் 19 நகர்ப்புற சுகாதார மையங்களில் தடுப்பூசி போடப்பட்டு வந்த நிலையில் தற்போது தட்டுப்பாடு காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் நேற்று 6 லட்சம் தடுப்பூசி சென்னை வந்த நிலையில் இரவோடு இரவாக பிரித்து அனுப்பப்பட்டது. அதன்படி இன்று வழக்கம் போல் அனைத்து இடங்களிலும் தடுப்பூசி போடும் பணி நடைபெறுகிறது. ஆன்லைன் பதிவுகள் கிடையாது. நேரில் வந்து தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இந்நிலையில் சென்னை மாநகராட்சி இணையதளத்தில் கோவிஷீல்டு மட்டும் கையிருப்பு உள்ளதை போன்று பதிவிடப்பட்டிருந்தது.

Related Stories: