பொதுப்பணித்துறை ஊழியர்கள் முதலமைச்சரின் பொது நிவாரண நிதி்க்குரூ.50 லட்சம் வழங்கல்: மு.க.ஸ்டாலினிடம் அமைச்சர் எ.வ.வேலு நேரில் வழங்கினார்

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு பணிக்காக, முதல்வரின் பொது நிவாரண நிதிக்காக தாராளமாக நிதியுதவி அளிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.இந்த நிலையில், பொதுப்பணித்துறை கட்டிடம் மற்றும் மின் பிரிவு அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் ஒரு நாள் நிவாரண நிதிக்குரூ.50,01,889 வசூல் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை மண்டல கட்டிட பிரிவு தலைமை பொறியாளர் அலுவலக ஊழியர்கள் மூலம்ரூ.21,12,847ம், திருச்சி மண்டல கட்டிட பிரிவு தலைமை பொறியாளர் அலுவலக ஊழியர்கள் மூலம்ரூ.16,53,102ம், மதுரை மண்டல கட்டிட பிரிவு தலைமை பொறியாளர்கள் அலுவலக ஊழியர்கள் மூலம்ரூ.12,35,940 பங்களிப்பாக வழங்கப்பட்டுள்ளது. இந்த நிதியை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் நேரில் சந்தித்து நேற்று வழங்கினார். இந்த சந்திப்பின் போது கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனா, கட்டுமான பிரிவு முதன்மை தலைமை பொறியாளர் விஸ்வநாதன் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

Related Stories: