மெகாபுரோஸ்தெசிஸ் தொடை எலும்பு மாற்று சிகிச்சை, லேப்ரோஸ்கோபிக் நெப்ரெக்டோமி சிகிச்சை இந்தியாவிலேயே முதன்முறையாக ஒரே அமர்வில் பல்நோக்கு செயல்முறை அறுவை சிகிச்சை: அப்போலோ புற்றுநோய் சிகிச்சை மையம் சாதனை

சென்னை: அப்போலோ மருத்துவமனையின் தலைவர் டாக்டர் பிரதாப் சி ரெட்டி கூறுகையில்: அசாமைச் சேர்ந்த 54 வயதான ஒரு பெண், இடது தொடை எலும்பு முறிவுக்கு ஆளானார். இரண்டு மாதங்களுக்கு முன்பு சிறிய காயத்தால் அவதிப்பட்ட அவர் படுத்த படுக்கையாக இருந்தார். அவர் முற்றிலும் நடக்க முடியாத நிலையில் அப்போலோ ப்ரோட்டான் புற்றுநோய் சிகிச்சை மையத்தில்  கடந்த 13ம் தேதி சேர்க்கப்பட்டார். பரிசோதனை மற்றும் பயாப்ஸி ஆகியவற்றின் மூலம் அவருக்கு மெட்டாஸ்டேடிக் இடது சிறுநீரக செல் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. இது சிறுநீரகத்தில் புண்ணை உண்டாக்குவதாகும்.

இது ஒரு வகை மெட்டாஸ்டாஸிஸ் ஆகும். இதில் அசல் அல்லது முதன்மை கட்டியிலிருந்து உருவாகும் புற்றுநோய் செல்கள் உடலில் பயணித்து உடலின் ஒன்று அல்லது இரண்டு பகுதிகளில் சிறிய எண்ணிக்கையிலான புதிய கட்டிகளை மெட்டாஸ்டேடிக் கட்டிகள் உருவாக்கும். தொடை எலும்பிலும் அவருக்கு கட்டி இருந்தது. எங்கள் மருத்துவர்கள் குறைந்தபட்ச துளையிடல் சிகிச்சை முறைகள் மூலம் கட்டியை அகற்ற திட்டமிட்டனர். அவரை மீண்டும் நடக்க வைக்கும் வகையில் சிகிச்சை முறைகளைத் தொடங்கினர்.

மேலும் ஒரு புதிய முயற்சியாக ஒரே நேரத்தில் நோயாளிக்கு இரண்டு சிகிச்சை நடைமுறைகளைச் செய்தனர். இரண்டு நடைமுறைகளும் ஆறு மணி நேரத்தில் முடிக்கப்பட்டன. கட்டி இருந்த முழங்கால் மூட்டு பரந்த விளிம்புகளுடன் அகற்றப்பட்டு மெகா புரோஸ்தெசிஸ் சிகிச்சை மூலம் அது மாற்றப்பட்டது. அந்நோயாளிக்கு அதே நேரத்தில் லேப்ரோஸ்கோபிக் ரேடிக்கல் நெப்ரெக்டோமி சிறுநீரகத்தை அகற்றுதல் மேற்கொள்ளப்பட்டது. இது அதே அமர்வில் அடிவயிற்றில் 3 சிறிய 5 மில்லி மீட்டர் துளைகள் இடப்பட்டு மூலம் மேற்கொள்ளப்பட்டது. இந்த சிகிச்சை முறைக்குப் பிறகு அடுத்த நாளே நோயாளி நடக்கத் தொடங்கினார்.

கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்குப் பிறகு முதல் முறையாக அவர் நடந்தார். உள் பரவல் இருப்பது சிடி ஸ்கேனில் கண்டறியப்பட்டதைக் கருத்தில் கொண்டு, சிறந்த சிகிச்சை மற்றும் நோயாளி விரைவில் குணம் அடைவதற்காக விரிவான உள் சிகிச்சை முறைகள் மேற்கொள்ளப்பட்டன என்றார். மேலும் அப்போலோ மருத்துவமனைகள் குழுமத்தின் துணை செயல் தலைவர் ப்ரீதா ரெட்டி கூறுகையில்: மல்டிமோடல் எனப்படும் பல்நோக்கு செயல்முறை மேலாண்மையால் மட்டுமே இது சாத்தியமாகும். இதில் ஒவவொரு துறைகளிலும் மிகவும் சிறப்பு வாய்ந்த மருத்துவர்கள் சிறந்த செயல்பாட்டு நடைமுறைகளை மேற்கொள்கின்றனர். புற்றுநோயியல் சிகிச்சையில் சிறந்த விளைவுகளை அடைய நோயாளிகளுக்கு மிகச் சிறந்த சிகிச்சை மற்றும் பராமரிப்பை வழங்குகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: