வள்ளுவர் கோட்டம் பொலிவு பெறுகிறது: அமைச்சர் மதிவேந்தன் தகவல்

சென்னை: சுற்றுலாத்துறை சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் சென்னை, தலைமைச் செயலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்த குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு தமிழகத்தில் சுற்றுலாவை மேம்படுத்த பரிந்துரை அளிக்கும். சுற்றுலாத்துறை தொடர்பாகவும், அதனை மேம்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை, மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு தயாராவது தொடர்பாக இன்று (1ம் தேதி) முதலமைச்சருடன் ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறேன். தமிழகத்தில் மக்கள் அதிகம் கூடும் சுற்றுலா இடங்களை மக்கள் ரசிக்கும் வகையில் மேம்படுத்த நடவடிக்கை திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை, பூம்புகாரைத் தொடர்ந்து சென்னை வள்ளுவர் கோட்டத்தையும் புனரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சுற்றுலாத்துறை செயலியை மேம்படுத்தி மக்கள் எளிதில் பயன்பெறும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: