புதிய தொழிற்சாலைகள் தொடங்குவது குறித்து ஆலோசனை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் டாடா நிறுவன அதிகாரிகள் சந்திப்பு

சென்னை: தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் கடந்த மே மாதம் 7ம் தேதி பொறுப்பேற்றார். இதையடுத்து. தமிழகத்தில் புதிய தொழில்சாலைகள் அமைப்பது குறித்து கடந்த வாரம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்திலும் ஆலோசனை நடத்தப்பட்டது. இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலினை நேற்று தலைமை செயலகத்தில், டாடா மற்றும் டிரண்ட் முதலீட்டு நிறுவனத்தின் தலைவர் நோயல் டாடா சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தொழில் துறை முதன்மை செயலாளர் முருகானந்தம், வோல்டாஸ் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அலுவலர் பிரதீப் பக்‌ஷி, டிரண்ட் நிறுவனத்தின் செயல் இயக்குநர் (நிதி) பி.வெங்கடேசலு, டாடா பன்னாட்டு நிறுவனத்தின் செயல் இயக்குநர் மற்றும் தலைமை செயல் அலுவலர் ஆனந்த் சென் மற்றும் டாடா குழும உயர் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

அதேபோன்று, சாம்சங் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை செயல் அலுவலர் (தென்மேற்கு ஆசியா) கென் காங் சந்தித்து பேசினார். அப்போது பெரும்புதூர் சாம்சங் தொழிற்சாலையின் மேலாண்மை இயக்குநர் பியாங் ஜின் காங், முதுநிலை துணை தலைவர் மனு கபூர், இயக்குநர் (அரசு விவகாரங்கள்) எஸ்.கண்ணன் மற்றும் சாம்சங் நிறுவன உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Related Stories: