சிவகிரியில் நெல் கொள்முதல் நிலையம்-கலெக்டர் ஆய்வு

சிவகிரி : வாசுதேவநல்லூர்  தொகுதிக்கு உட்பட்ட சிவகிரி வட்டாரத்தில் சுமார் 7,500 ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளது. இங்கு சாகுபடி செய்யப்படும் நெல்லை கொள்முதல் செய்வதற்கு அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இக்கோரிக்கையை மாவட்ட நிர்வாகம் ஏற்றுக்கொண்டு தற்காலிகமாக சிவகிரி பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டது.

சிவகிரி வட்டாரம் இராசிங்கப்பேரி கண்மாய் பாசன பகுதி உட்பட்ட 15 குளப்புரவுகளில் உள்ள சுமார் 7500 ஏக்கர் நன்செய் நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள நெல் பயிர்கள் இப்போது அறுவடை செய்யப்பட்டு கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு வரப்படுகின்றன. மாவட்ட கலெக்டர் கோபால சுந்தரராஜ், சிவகிரி பகுதியில் உள்ள நெல் கொள்முதல் நிலையத்தை பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். அப்போது விவசாயிகள் நிரந்தரமாக இந்த நெல் கொள்முதல் நிலையத்தை செயல்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

 ஆய்வின்போது கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்) பாலசுப்பிரமணியன், வேளாண் உதவி இயக்குநர் இளஞ்செழியன், வேளாண் அலுவலர் சிவமுருகன், வைத்திலிங்கம் அரவிந்த், திமுக மருத்துவர் அணி மாவட்ட அமைப்பாளரும் சிவகிரி பேரூர் திமுக செயலாளருமான டாக்டர் செண்பகவிநாயகம், வக்கீல் அணி மாவட்ட துணை அமைப்பாளர் பொன்ராஜ், விவசாய அணி மாவட்ட  துணை அமைப்பாளர் பூமிநாதன், மனோகரன், பேரூராட்சி நிர்வாக அலுவலர் அரசப்பன், ஆர்ஐ சரவணக்குமார், விஏஓக்கள் வீரசேகர், புதியராணி, விவசாயிகள் சங்க நிர்வாகிகள் ரத்தினவேலு, ராமராஜ், பழனிச்சாமி, ராஜாபாண்டி, சந்திரசேகரன், மகேஸ்வரன், புல்லட் கணேசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Related Stories: