மின் பராமரிப்பு பணிகள் நிறைவு!: தமிழ்நாட்டில் இனி மின்தடை இருக்காது...மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்..!!

சென்னை: பெரும்பாலான பகுதிகளில் மின் பராமரிப்பு பணிகள் நிறைவடைந்துவிட்டதால் தமிழகத்தில் இனி மின்வெட்டு இருக்காது என்று மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ளார். சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் மின் விநியோகம் மற்றும் பராமரிப்பு பணிகள் தொடர்பான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில்பாலாஜி, அதிமுக ஆட்சியில் மின் வாரியத்திற்கு அதிக கடன்சுமை ஏற்பட்டிருப்பதாக கூறினார். 

மின்வாரியம் வாங்கிய கடனுக்கான வட்டி மட்டுமே பல்லாயிரம் கோடி ரூபாய் செலுத்தப்படுவதாகவும் தற்போது வட்டி தொகையில் 2 ஆயிரம் கோடி ரூபாயை குறைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார். பெரும்பாலான இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் முடிவடைந்துவிட்டதால் இனி தமிழகத்தில் மின்தடை இருக்காது என்று அமைச்சர் செந்தில்பாலாஜி குறிப்பிட்டார். 

தமிழகத்தில் மின் வெட்டு இருப்பதாக சிலர் பொத்தாம் பொதுவாக புகார் கூறுவதாகும். மின்வெட்டு குறித்து புகார் அளித்தால் உடனே நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார். மேலும் இனி மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் மட்டுமே நடைபெறும் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

Related Stories: