கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்த பொதுமக்களுக்கு நிவாரண உதவி: உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ வழங்கினார்

தண்டையார்பேட்டை: கலைஞர் பிறந்த நாளையொட்டி கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்த பொதுமக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி, ராயபுரம் பழைய வண்ணாரப்பேட்டை சிமிட்ரி சாலையில் உள்ள ராபின்சன் பூங்காவில் நேற்று நடைபெற்றது.  இதில்,  சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று, 30 பத்திரிகையாளர்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கினார். தொடர்ந்து, வடசென்னை எம்பி கலாநிதி வீராசாமி ஏற்பாட்டில் ராயபுரம், ஆர்கே நகர், திருவொற்றியூர், பெரம்பூர், திருவிக நகர், கொளத்தூர்  உள்ளிட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்த மக்களுக்கு நிவாரண பொருட்களை வாகனங்களில்  அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த வாகனங்களை உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில், அறநிலையத்துறை அமைச்சர்  பி.கேசேகர்பாபு, எம்எல்ஏக்கள் மாதவரம் சுதர்சனம், ஆர்.டி.சேகர், ஐட்ரீம்ஸ் மூர்த்தி மற்றும் மாவட்ட பொறுப்பாளர் இளைய அருணா,  வழக்கறிஞர் அணி மாவட்ட அமைப்பாளர் மருதுகணேஷ், பகுதி செயலாளர்கள் சுரேஷ், செந்தில் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.   தொடர்ந்து, மாநகராட்சி 5வது மண்டலத்திற்கு உட்பட்ட அம்மா உணவக ஊழியர்கள் 2 லட்சத்து 7 ஆயிரத்து 600 ரூபாயை முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்காக உதயநிதி ஸ்டாலினிடம் வழங்கினர். தொடர்ந்து ஆர்.கே.நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.

Related Stories: