நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு சொந்தமான அரசு சொத்துக்களை பராமரிக்க இணையதளம்: அமைச்சர் கே.என்.நேரு துவக்கி வைப்பு

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு சொந்தமான அசையும் மற்றும் அசையா சொத்துக்களை விடுதலின்றி பட்டியலிட்டு பராமரிக்க மின் ஆளுமையின்கீழ் புதிய இணையவழி தளத்தினை நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு  துவக்கி வைத்தார். இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை:   நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு சொந்தமான அசையும் மற்றும் அசையா சொத்துக்களை உரிய முறையில் பாதுகாக்க உத்தரவிட்டதன் பேரில் 14 மாநகராட்சிகள் மற்றும் 121 நகராட்சிகளிலும் உள்ள அனைத்து அசையும் மற்றும் அசையா சொத்துக்களை விடுதலின்றி பட்டியலிட்டு பராமரிக்க மின் ஆளுமையின்கீழ் புதிய இணையவழி தளம் தயார் செய்யப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக திருச்சி மாநகராட்சியின் சொத்துக்களை பதிவேற்றம் செய்யும் இணையவழி மென்பொருள் சேவை தொடங்கப்பட்டது.  ஒரு மாத காலத்திற்குள் அனைத்து மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் இச்சேவை ஏற்படுத்தப்பட்டு மேலாண்மை செய்யப்படுவதோடு விரைவில் பொதுமக்கள் அனைவரும் அறியும் வண்ணம் இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது. தமிழகத்தில் உள்ள 14 மாநகராட்சிகள் சென்னை நீங்கலாக மற்றும் 121 நகராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு திட்டப்பணிகள் குறித்து அமைச்சர் நேரு விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.மேலும் ஆவடி மாநகராட்சியின் சார்பில்பொதுமக்களுக்கு கோவிட் தடுப்பூசி செலுத்த செயல்படுத்தப்படவுள்ள தற்காலிக தடுப்பூசி முகாம்களின் மாதிரி வடிவத்தை பார்வையிட்டு தடுப்பூசி செலுத்தப்படுவது ஆய்வு செய்யப்பட்டது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: