ஈழத்தமிழ் அகதி வாரிசுகளின் மருத்துவக் கல்வி கனவை நனவாக்க வேண்டும்: அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டு தமிழர்களுக்கு வழங்கப்படுவதில் பெரும்பான்மையான உதவிகள் ஈழத்தமிழ் அகதிகளுக்கும் வழங்கப்படுகிறது. அவ்வாறு இருக்கும்போது மருத்துவக் கல்வி வாய்ப்பு மட்டும் மறுக்கப்படுவது எந்த வகையிலும் அறமல்ல. அதிலும் கடந்த சில ஆண்டுகளாக மருத்துவப் படிப்பில் சேர விரும்பும் ஈழத் தமிழ் அகதிகளின் வாரிசுகளில் பெரும்பான்மையானோர் தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்தவர்கள். இந்தியாவில் வசிக்க விரும்பும் ஈழத்தமிழ் அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை பெற்றுத் தரப்படும் என்று 2021 தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையில் திமுக வாக்குறுதி அளித்துள்ளது.

அதை சாத்தியமாக்க நீண்ட காலம் ஆகலாம். ஆனால், ஈழத்தமிழ் அகதிகளின் வாரிசுகளுக்கு மருத்துவக் கல்வி பயில சிறப்பு ஒதுக்கீடு வழங்குவது சாத்தியமானது தான். தமிழ்நாட்டில் இதை எவரும் எதிர்க்கவும் மாட்டார்கள். எனவே, தமிழ்நாட்டில் மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கையில் ஈழத்தமிழ் அகதிகளின் வாரிசுகளுக்கு குறிப்பிட்ட அளவு இடங்களை சிறப்பு ஒதுக்கீடாக ஒதுக்க வேண்டும். ஈழத்தமிழ் அகதிகளின் வாரிசுகளின் மருத்துவக் கல்வி கனவை தமிழ்நாடு அரசு உடனடியாக நனவாக்க வேண்டும்.

Related Stories: