திருவல்லிக்கேணி தீர்த்தபாலீஸ்வரர் கோயிலில் பாதுகாப்பு நடவடிக்கை: அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ேநரில் ஆய்வு

சென்னை: திருவல்லிக்கேணி தீர்த்தபாலீஸ்வரர் கோயிலில் பக்தர்களுக்கான வசதிகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து  அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.  திருவல்லிக்கேணி தீர்த்தபாலீஸ்வரர் கோயிலில் கடந்த 17ம் தேதி பின்புற மதில் சுவர் வழியாக அடையாளம் தெரியாத சில நபர்கள் கோயில் உண்டியலை உடைத்து கொள்ளையடிக்க முயன்றனர். அப்போது, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஒப்பந்த நியமன காவலர் பாபுவை கொள்ளையடிக்க வந்த கும்பல் சரமாரியாக தாக்கி விட்டு தப்பி சென்றது. இதையடுத்து படுகாயமடைந்த பாபு ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிக்சை பலனின்றி கடந்த 20ம் தேதி உயிரிழந்தார்.

இந்நிலையில், தீர்த்தபாலீஸ்வரர் கோயிலில் பக்தர்களுக்கான வசதிகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, கோயில் உண்டியலுக்கு மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து, அமைச்சர் சேகர்பாபு கோயிலுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் உடனடியாக மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டிருந்தார். தொடர்ந்து காவலர் பாபு வீட்டுக்கு சென்று அவரது குடும்பத்திற்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார்.

இந்த ஆய்வின்போது இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், சென்னை மண்டலம் இரண்டு இணை ஆணையர்  ரேணுகாதேவி, கோயில் செயல் அலுவலர் மற்றும் அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: