கடைமடை பகுதிக்கு வந்தது காவிரி நீர்-நேரடி நெல் விதைப்பில் விவசாயிகள் தீவிரம்

வேதாரண்யம் : வேதாரண்யம் தாலுகா தலைஞாயிறு ஒன்றியம் பிரிஞ்சு மூலை மதகடிக்கியில் இருந்து விவசாய பயன்பாட்டிற்காக தண்ணீர் திறக்கப்பட்டது.மேட்டூர் அணை கடந்த 12ம்தேதி குறுவை சாகுபடிக்காக திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் கல்லணை கால்வாய்க்கு 16ம்தேதி வந்து சேர்ந்தது. அங்கிருந்து திறக்கப்பட்ட தண்ணீர் கடைமடை பகுதியான வெண்ணாறு வடிநிலக் கோட்டம் தலைஞாயிறு பகுதி பிரிஞ்சி மூலைக்கு நேற்று பிற்பகல் வந்து சேர்ந்தது.

மேட்டூரில் திறக்கப்பட்ட தண்ணீர் கடைமடை பகுதிக்கு வந்து சேர் ந்ததால், தலைஞாயிறு சுற்றியுள்ள வடுவூர், சித்தாய்மூர், மணக்குடி, காடந்தேத்தி உள்ளிட்ட 23 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்களில் சாகுபடி செய்யும் விவசாயிகள் நெல் மணிகள் மற்றும் பூக்களை தூவி வழிபாடு செய்து மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். கடைமடை பகுதிக்கு தண்ணீர் வந்து சேர்ந்து விட்டதால் விவசாயிகள் குறுவை சாகுபடிக்கான நேரடி நெல் விதைப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: