தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக 8 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்..!!

சென்னை: தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்திருக்கிறது. தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் அரியலூர், பெரம்பலூர், கடலூர், தேனி, திண்டுக்கல் மற்றும் டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்திருக்கிறது. 

புதுவை, காரைக்காலில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று வானிலை மையம் கணித்துள்ளது. தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் வரும் 26ம் தேதி வரை மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக செய்யூர், வளவனூரில் தலா 7 சென்டி மீட்டர் மழை பதிவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. 

Related Stories: