புதுசத்திரம் ஊராட்சி அருகே செயல்பாட்டிற்கு வருமா சுகாதார வளாகம்?

சின்னாளபட்டி : புதுசத்திரம் ஊராட்சி அலுவலகம் அருகே செயல்படாமல் இருக்கும் பெண்கள் சுகாதார வளாகம் புதர் மண்டிகிடப்பதால் திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்தும் அவல நிலையில் மக்கள் உள்ளனர். ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் புதுசத்திரம் ஊராட்சி மன்ற அலுவலகம் எதிரே பெண்கள் மற்றும் குழந்தைகள் சுகாதார வளாகம் உள்ளது. கடந்த 2 வருடங்களாக சுகாதார வளாகம் செயல்படாமல் இருப்பதால் புதர்மண்டி கிடக்கிறது.

அத்துடன் கழிப்பறையின் உள்ளே புல் மற்றும முட்செடிகள் அதிக அளவில் இருப்பதால் பாம்புகளின் கூடாரமாக உள்ளது. கழிப்பறையின் உள்ளே செல்ல முடியாத அளவிற்கு முட்செடிகள் இருப்பதால் கழிப்பறையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இதனால் அப்பகுதி பெண்கள் கம்பிளியம்பட்டி செல்லும் சாலையை திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்தும் அவலநிலையில் உள்ளனர்.இதனால் மனித கழிவுகளால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அப்பகுதி பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: