பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பட்டா கத்தியால் கேக் வெட்டிய 2 பேர் கைது

சென்னை: புழல் ஏரிக்கரை பகுதியில் உள்ள செங்குன்றம் நாரவாரிக்குப்பம் திரு.வி.க. தெருவை சேர்ந்தவர் அரவிந்தன் (26). வாகனங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் கடையில் வேலை செய்து வருகிறார். அதே பகுதி சி.கே.மாணிக்கனார் தெருவை சேர்ந்தவர் பிரவீன்குமார் (22), எலெக்ட்ரிஷியன் வேலை செய்து வருகிறார். இருவரும் நண்பர்கள். இந்நிலையில், அரவிந்தனுக்கு கடந்த 17ம் தேதி பிறந்தநாள் என்பதால், அதை கொண்டாட முடிவு செய்தார். இதற்காக கேக் வாங்கிக் கொண்டு ஏரிக்கரை சாலைக்கு சென்ற அவர், நண்பர் பிரவீன்குமாருடன் சேர்ந்து பட்டா கத்தி மூலம் கேக் வெட்டியதோடு, அதை செல்போனில் வீடியோ எடுத்து வாட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரப்பினர். இதுபற்றி அறிந்த செங்குன்றம் போலீசார், இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்தனர்.

Related Stories:

>