டெல்லி பயணத்தில் அமித்ஷாவுக்கு இணையான மரியாதையை ஸ்டாலினுக்கு வழங்கிய மோடி: ஆச்சரியத்தில் மாநில முதல்வர்கள்

சென்னை:   தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 2 நாள் பயணமாக நேற்று முன்தினம் டெல்லி சென்றார். அங்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா, ராகுல்காந்தி உள்ளிட்டோரை சந்தித்து் பேசினார். நேற்று பிற்பகலில் சென்னை திரும்பினார்.  தமிழக முதல்வருக்கு தமிழகத்தில் இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. ஆனால் டெல்லி செல்லும்போது அவருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கும்படி, தமிழக போலீசின் சார்பில் மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டது. இந்த அறிக்கை பிரதமர் மோடியின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. வழக்கமாக அந்தந்த மாநிலங்களில் எந்த வகையான பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருந்தாலும், டெல்லிக்கு வரும்போது அவர்களுக்கு அதே பாதுகாப்பை மத்திய அரசு வழங்குவதில்லை. அவர்கள் ஒவ்வொரு விஐபிக்கும் ஒரு வரையறை வைத்துள்ளனர். அந்த பாதுகாப்புத்தான் வழங்குவார்கள்.

 நாடு முழுவதிலும் உள்ள முதல்வர்கள் டெல்லி செல்லும்போது, ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படும். ஓய் பிரிவு பாதுகாப்பு வழங்கும்போது, ஒரு சப்-இன்ஸ்பெக்டர், 4 போலீசார் கொண்ட பாதுகாப்பு மட்டுமே வழங்கப்படும். இவர்கள், விஐபியின் காருக்கு முன்னாள் பாதுகாப்பாக செல்வார்கள். இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கும் விஐபியின் காருக்கு முன்னால் ஒரு வாகனம் மட்டுமே பாதுகாப்புக்கு செல்லும். அந்த வாகனத்தில் ஒரு இன்ஸ்பெக்டர் மற்றும் 4 காவலர்கள் மட்டும் ஆயுதங்களுடன் இருப்பார்கள். ஆனால் இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கினால், விஐபியின் காருக்கு முன்னும், பின்னும் கார்கள் பாதுகாப்புக்கு செல்லும். ஒரு உதவி கமிஷனர் தலைமையில் ஒவ்வொரு காரிலும், ஒரு இன்ஸ்பெக்டர் 4 காவலர்கள் வீதம் மொத்தம் 11 பேர் வாகன பாதுகாப்பில் இருப்பார்கள்.

 அதைத் தவிர விஐபி தங்கும் இடத்தில் ஒரு இன்ஸ்பெக்டர் மற்றும் 8 போலீசார், முன் வாசலிலும், பின் வாசலில் ஒரு இன்ஸ்பெக்டர் 8 போலீசாரும் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள். அங்கும் ஒரு உதவி கமிஷனர் தலைமையில் இந்த பாதுகாப்பு கொடுக்கப்படும். நமது நாட்டைப் பொறுத்தவரை உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ஆகியோருக்குத்தான் இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. மற்ற மாநில முதல்வர்கள் டெல்லி செல்லும்போது ஒய் பிரிவு பாதுகாப்புதான் வழங்கப்படுகிறது.  முதல் முறையாக முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லி சென்றபோது அவருக்கு அமித்ஷா, ராஜ்நாத் சிங் ஆகியோருக்கு வழங்கப்படும் பாதுகாப்பு வழங்கும்படி பிரதமர் மோடி உத்தரவிட்டார். அதன்படி அவருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட இந்த பாதுகாப்பை கேள்விப்பட்டதும் பாஜக ஆளும் மாநிலங்கள் உள்பட அனைத்து மாநில முதல்வர்களும் ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளனர்.

Related Stories: