நீர்வளத்துறையில் பல்வேறு திட்டப்பணிகளின் விவரங்களை ஜூன் 21க்குள் அனுப்ப வேண்டும்: அனைத்து மண்டல தலைமை பொறியாளர்களுக்கு உத்தரவு

சென்னை: சட்டமன்ற பேரவை கூட்டத் தொடர் தொடங்கவுள்ள நிலையில் நீர்வளத்துறையில் பல்வேறு திட்டப்பணிகளின் விவரங்களை ஜூன் 21க்குள் அறிக்கையாக அனுப்ப நீர்வளத்துறை முதன்மை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி அனைத்து மண்டல தலைமை பொறியாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து நீர்வளத்துறை முதன்மை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி, அனைத்து மண்டல தலைமை பொறியாளர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: 2021-22ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை தொடர்பான வரைவு கொள்கை விளக்க குறிப்பு 2021-22ல் இடம்பெற வேண்டிய தங்களது மண்டலம், பிரிவு சார்ந்த குறிப்புகள் தொடர்புடைய நேரடியாகவோ மின்னஞ்சல் வாயிலாகவோ உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும்.

ரூ.1000 கோடி மதிப்பிலான முடிக்கப்பட்டுள்ள மற்றும் நடந்து வரும் தடுப்பணைகள் ஆகியவற்றின் உயர்தரத்திலான புகைப்படங்களை ஜூன் 21ம் தேதிக்குள்  அனுப்பி வைக்க வேண்டும். அதில், 2020-21, 2021-22 நிதியாண்டில் மாநில நிதி, நபார்டு நிதி, அணை புனரமைப்பு மற்றும் மேம்பாட்டு திட்டம், தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனப்படுத்தும் திட்டம், குடிமராமத்து திட்டம், தேசிய வேளாண்மை மேம்பாட்டு திட்டம், நீர்நிலைகளை செப்பனிடுதல், புதுப்பித்தல் மற்றும் புனரமைத்தல், வெள்ள தடுப்பு பணிகள், கடலோர பாதுகாப்பு பணிகள், நீட்டித்தில் மற்றும் புனரமைத்தல், நவீன மயமாக்கும் திட்டப்ப ணிகள், காவிரி-வைகை குண்டாறு நதிகள் இணைப்பு திட்டத்தில் நடைபெற்று வரும், முடிவுற்ற பணிகள் விவரங்களை அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: