திருப்பூரில் எளிமையாக திருமணம் கொரோனா நிதி 37.5 லட்சம் வழங்கிய புதுமண தம்பதி

திருப்பூர் : திருப்பூரை சேர்ந்த அருள்செல்வம் என்பவரின் மகன் அருண் பிரனேசுக்கும்,  திருப்பூரை சேர்ந்த தொழிலதிபரின் மகள் அனுவுக்கும் திருணம் நிச்சயிக்கப்பட்டு காங்கயம் வட்டமலை அங்காளம்மன் கோயிலில்  நேற்று எளிமையாக திருமணம் நடந்தது.  திருமணம் முடிந்த கையோடு மணமக்கள், திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு எதிரே உள்ள ரோட்டரி கொரோனா கேர் சென்டருக்கு ரூ.5 லட்சம், பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள கொரோனா மையத்திற்கு ரூ.11 லட்சம், புஞ்சை புளியம்பட்டி ரோட்டரி சங்கம் சார்பில் கட்டப்பட்டு வரும் முதியோர் இல்லத்திற்கு ரூ.2 லட்சம், திருப்பூர் வடக்கு ரோட்டரி சங்கம் சார்பில் பல்லடம் அரசு மருத்துவமனை சிகிச்சை மையத்தில் ஐசி யூனிட் அமைக்க ரூ.7.66 லட்சம், மருத்துவ செலவினங்களை எதிர்கொள்ள முடியாமல் இருக்கும் 8 குடும்பங்களுக்கு ரூ.7 லட்சம் என மொத்தம் 37.66 லட்சத்தை வழங்கினர்.

இது குறித்து அருள் செல்வம் கூறுகையில், `திருமணத்திற்கென தனித்தொகையை ஒதுக்கினோம். திருமணம் கொரோனா விதிகளின்படி நடந்ததால் செலவு குறைந்தது. அதனால், மீதமுள்ள பணத்தை கொரோனா பணிகளுக்காக அளித்தோம்’ என்றார். மணமக்களின் இந்த செயல் பலரையும் வியப்பில் ஆழ்த்தியது.

Related Stories:

>