வேகமாக குறையும் கொரோனா ஒரே நாளில் 11,805 பேருக்கு தொற்று

சென்னை: தமிழக  சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் நேற்று 1,70,961 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 11,805 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் 6,727 பேர் ஆண்கள், 5,078 பெண்கள் ஆவர். மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 25,561பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினர்.இதுவரை 21,99,808 பேர் குணமடைந்துள்ளனர். மருத்துவமனை, வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை 1,25,215 ஆக உள்ளது. மேலும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 267 பேர் நேற்று உயிரிழந்தனர். இதில் 119 பேர் தனியார் மருத்துவமனைகளிலும், 148 பேர் அரசு மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்றவர்கள் ஆவர். மொத்தம் 30,068 பேர் உயிரிழந்துள்ளனர்.

Related Stories: