கொரோனா ஊரடங்கால் காஞ்சி-யில் பட்டுச் சேலை விற்பனை பாதிப்பு!: 40 நாட்களில் ரூ.350 கோடி அளவுக்கு வருவாய் இழப்பு..!!

காஞ்சிபுரம்: கொரோனா ஊரடங்கு காரணமாக காஞ்சிபுரத்தில் பட்டுச் சேலை விற்பனை கடைகள் மூடப்பட்டிருப்பதால் 40 நாட்களில் சுமார் 350 கோடி ரூபாய் அளவிற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. பட்டுச் சேலைக்கு புகழ்பெற்ற காஞ்சிபுரத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 40 நாட்களாக கடைகள் மூடப்பட்டிருக்கின்றன. 

காஞ்சிபுர நகர பகுதிகளில் மட்டுமே 100 பட்டுசேலை கடைகளும் அதன் மூலம் சுமார் 10 ஆயிரம் குடும்பங்களும் பயனடைந்து வருகின்றனர். ஆனால்  கொரோனா ஊரடங்கு காரணமாக காஞ்சிபுரத்தில் கடைகள் மூடப்பட்டிருப்பதால் அவர்களது வாழ்வாதாரமே கேள்விக்குறியாகியுள்ளது. 

கடந்த ஆண்டு ஊரடங்கு பாதிப்பில் இருந்து மெல்ல மெல்ல மீண்டு வந்த நிலையில், தற்போது இந்த ஆண்டும் கடைகள் மூடப்பட்டிருப்பதால் சுமார் 350 கோடி ரூபாய் அளவிற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாக கடை உரிமையாளர்கள் கூறுகின்றனர். 

தங்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு கட்டுப்பாடுகளுடன் பட்டுசேலை விற்பனை கடைகளை திறக்க அரசு அனுமதி அளிக்க வேண்டும் என கடை உரிமையாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். 

Related Stories:

>