ஆரல்வாய்மொழி காற்றாலையில் தீ

ஆரல்வாய்மொழி,: ஆரல்வாய்மொழி, முப்பந்தல், குமாரபுரம் மற்றும் பழவூர் ஆவரைகுளம், ராதாபுரம் ஆகிய பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட  காற்றாலைகளை நிறுவி அதன் மூலம் காற்றாலை நிறுவனங்கள் மின்சாரம் தயாரித்து வருகின்றன. குறிப்பாக ஆரல்வாய்மொழி முப்பந்தல் அருகே காற்றின் வேகம் அதிகமாக காணப்படுவதால் அந்த பகுதியில் அதிகமாக காற்றாடிகளை நிறுவி அதன் மூலம் அதிக அளவு மின்சாரத்தை உற்பத்தி செய்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று இரவு ஆரல்வாய்மொழி மூவேந்தர்நகர் அருகே உள்ள ஒரு காற்றாலை நிறுவனத்திற்கு சொந்தமான காற்றாடியின் மேல் பகுதியில் இருந்து தீப்பொறி கிளம்பியது.

காற்றின் வேகத்தின் காரணமாக தீப்பிழம்பாக மாறி மளமளவென்று தீப்பிடிக்க தொடங்கியது, காற்றாலையின் அருகே குடியிருப்பு பகுதி இருந்த காரணத்தினால் அந்த பகுதியில் உள்ள பொது மக்கள் அங்கு கூடத்தொடங்கினர். பின்னர் காற்றாலை நிறுவன ஊழியர்களுக்கும்,தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். நாகர்கோவில் தீயணைப்பு துறையினர் அங்கு விரைந்து வந்து தீயினை அணைத்தனர். தீ மளமளவென்று எரிய தொடங்கியதால் காற்றாடியின் இன்ஜின் பகுதி முற்றிலும் எரிந்து நாசமாகியது. இன்ஜினில் ஏற்பட்ட உராய்வின் காரணமா தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Related Stories: