10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் மார்க் இருக்காது. மாணவர்கள் ஆல் பாஸ் என்று மட்டுமே இருக்கும் : அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

சென்னை: சென்னை அசோக் நகரில் உள்ள அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் மாணவர் சேர்க்கையை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழ்நாட்டில் 11ம் வகுப்பு மாணவர் சேர்கை தொடங்கி உள்ளது; 27 மாவட்டங்களில் நடப்பு கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கி உள்ளது. கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. கொரோனா காலத்தில் மாணவர் சேர்க்கை நடைபெறுவதால் விதிமுறைகளை மாணவர்கள் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்; தளர்வில்லாத 11 மாவட்டங்களில் இப்போதைக்கு மாணவர் சேர்க்கை இல்லை.

பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் மார்க் இருக்காது. மாணவர்கள் ஆல் பாஸ் என்று மட்டுமே இருக்கும் .ஒரு வாரத்திற்குள் புத்தகங்கள் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் . மாணவர்களை பள்ளிக்கு வரவழைத்து பாடம் நடத்துவது பற்றி இப்போதைக்கு யோசிக்கவில்லை. ஆன்லைன் கல்வி , கல்வி தொலைக்காட்சி வழியாகவே பாடம் நடத்துவது தொடர்ந்து நடைபெறும் ” என்று கூறினார்.இதே போன்று புதுக்கோட்டை விராலிமலை அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் பெற்றோர்கள், மாணவர்களை அழைத்து வந்து ஆர்வத்துடன் 11ம் வகுப்பில்  சேர்ப்பதற்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அளித்துள்ளனர். 11ம் வகுப்பு தவிர பிற வகுப்புக்கான மாணவர் சேர்க்கை நடைபெறவில்லை. கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் அரசு பள்ளிகளில் கூடுதலாக மாணவர்களை சேர்க்க கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

Related Stories:

>